Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர்கள் சிஐடியூ சங்கம் சார்பில் திங்கள்கிழமை வெளிநாட்டு பட்டாசு இறக்குமதியை தடைசெய்யக்கோரி சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் எம்.மகாலட்சுமி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மாவட்ட துணைத் தலைவர் ஜெ.லாசர் உள்ளிட்டோர் பேசினர்.
  இதில், 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்துவரும் பட்டாசுத் தொழிலை பாதுக்காக வெளிநாட்டுப் பட்டாசு இறக்குமதியை தடை செய்ய வேண்டும். கைத்தொழிலான பட்டாசுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் 12 சதம் கலால்வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0 comments: