Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டி சாலை விலக்கில் தம்மநாயக்கன்பட்டி மற்றும் பரட்டைநத்தம் கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் பேருந்து வசதி கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  இச்சாலை மறியலுக்கு பி.கல்லுமடம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.பெருமாள் மற்றும் வேடநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
  அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் அருப்புக்கோட்டையிலிருந்து இலுப்பையூர், ஆலடிபட்டி வழியாக அம்மன்பட்டி வரை போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறும், போதிய சாலை வசதி செய்து தருமாறும் கோஷம் எழுப்பினர்.
 தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகளும், ம.ரெட்டியபட்டி காவல் துறையினரும் அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
   இதுபற்றி கல்லுமடம் மற்றும் வேடநத்தம் பொதுமக்கள் கூறியதாவது:
 எங்கள் கிராமங்களுக்கு போதிய சாலை வசதியில்லை. அத்துடன் பள்ளி மாணவர்கள் 6 கி.மீ. நடந்து வந்து தான் பேருந்தில் பயணம் செய்ய வேண்டி உள்ளது.
     எனவே அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என கேட்டுக் கொண்டனர்

0 comments: