Friday, October 16, 2015

On Friday, October 16, 2015 by Unknown in ,    
தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் காலிப் பணியிடம் இருப்பின் அதனைப் பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியான நபர்களைத் தேர்வு செய்யலாம்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மாதந்தோறும், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. எனவே காலிப்பணியிடம் நிரப்ப விரும்பும் தனியார் நிறுவனங்கள் பணியின் பெயர், கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களுடன் கடிதம் மூலமாகவோ அல்லது க்ங்ர்ஸ்ண்ழ்ன்க்ட்ன்ய்ஸ்ஹஞ்ஹழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற இ-மெயில் முகவரிக்கோ அனுப்பலாம். பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேர்காணல் தேர்வு மூலம் வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்யலாம்.
இவ்வாறு, தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: