Friday, October 16, 2015

On Friday, October 16, 2015 by Unknown in ,    
2016இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
 அதிமுக பொதுசெயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, விருதுநகர் மாவட்டச் செயலராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அறிவித்தார். இதனையடுத்து அவர் மீண்டும் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாராக பதவியேற்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது, அதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது: உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சிப்பணியாற்றினால் அதற்கு உரிய இடத்தை முதல்வர் அளிப்பார். அந்த வகையில் என்னை இரண்டாம் முறையாக மாவட்ட செயலராக அறிவித்துக் கட்சிப்பணியாற்றும் வாய்பை முதல்வர் கொடுத்துள்ளார். 2016 இல் தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலலிதா முதல்வராக பதவியேற்பார் என்றார்.
  நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பாண்டியராஜன், வைகைச்செல்வன், மாவட்ட அவைத்தவர்  விஜயகுமார், பொருளாளர் ராஜவர்மன், ஒன்றியச் செயாலர் கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலர் பொன்சக்திவேல், சிவகாசி நகர் மன்றத்தலைவர் வெ.க.கதிரவன், சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலர் சண்முகக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   பிறகு, சிவகாசி மற்றும் திருத்தங்கலில் உள்ள தலைவர்களின் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

0 comments: