Thursday, October 15, 2015

On Thursday, October 15, 2015 by Unknown in ,    


திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை காலை, குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுள்ளது. இதையறிந்து அங்கு பொதுமக்கள் சென்று பார்த்துள்ளனர். அங்கு பிறந்து ஒரு நாளான பெண் குழந்தை கிடந்தது தெரியவந்துள்ளது.
இத்தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீஸார், அக்குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்

0 comments: