Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    

சிவகாசியில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் சோதனைச்சாவடியில் மீட்டு, 2 வாலிபர்களை கைது செய்தனர்.
1–ம் வகுப்பு மாணவி விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். அச்சக அதிபர். இவருடைய மகள் ரிஜிதா (வயது 5), சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள்.
தினமும் சுரேஷ் குமார் தனது மோட்டார் சைக்கிளில் மகளை அழைத்து வந்து பள்ளியில் விட்டு, பின்னர் பள்ளி முடிந்ததும் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் தனது மகளை பள்ளிக்கு அழைத்து வந்தார். பின்னர் மாலையில் வீட்டிற்கு அழைத்து செல்ல பள்ளிக்கு வந்தார்.
நீண்ட நேரமாகியும் மகள் பள்ளியில் இருந்து வெளியே வராததால், அதிர்ச்சி அடைந்த அவர் பள்ளியின் வகுப்பறைக்கு சென்று பார்த்தார். அப்போது வகுப்பறையில் யாரும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று பள்ளிக்கு வந்த தனது மகள் மாயமானது குறித்து தெரிவித்தார்.
உடனே பள்ளி முழுவதும் ஆசிரியர்கள் மாயமான பள்ளி மாணவியை தேடினர். ஆனால் மாணவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கடத்தல் அப்போது சுரேஷ் குமார் செல்போனிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் மகளை நாங்கள் தான் கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.1 கோடி கொடுத்து விட்டு மகளை மீட்டுச் செல்லுங்கள் என்று கூறினார்.
இதற்கு சுரேஷ்குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து ரூ.25 லட்சத்தை கொடுத்து விட்டு மகளை மீட்டு செல்லுங்கள் என்று கூறி விட்டு அந்த நபர் செல்போன் இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சி அடந்த அவர், தனது மகள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து, சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு, வெள்ளையனிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது.
கைது அதன்பேரில், நத்தம்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்றில் 2 வாலிபர்களுடன் ஒரு சிறுமி இருப்பதை கண்டனர். பின்னர் அந்த காரில் இருந்த வாலிபர்களை மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள், பராசக்தி காலனியை சேர்ந்த பரமசிவன் மகன் காளிராஜ் (26), சாட்சியாபுரத்தை சேர்ந்த வின்சென்ட் மகன் வனமுத்துராஜ்(29) என தெரியவந்தது. அவர்கள் சிறுமி ரிஜிதாவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரிஜிதாவை மீட்ட போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செலவு செய்ய பணம் தேவைப்பட்டதால் சிறுமியை கடத்தியதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட காளிராஜ், சுரேஷ்குமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் கழுத்தில் கத்தியுடன் வாட்ஸ் அப்பில் மிரட்டல் சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் கடத்தல்காரர்கள் அவருடைய தந்தை சுரேஷ்குமார் செல்போனிற்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் படம் அனுப்பி இருப்பதாக கூறினர். இதனைத் தொடர்ந்து சுரேஷ் குமார் தனது செல்போனில் ‘வாட்ஸ் அப்’பை பார்த்தபோது, அதில் அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்திருப்பது போன்று புகைப்படம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த புகைப்படத்தையும் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளையனிடம் காண்பித்து புகார் தெரிவித்தார்.

0 comments: