Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in , ,    



தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் இன்று (13.10.2015) நடைபெற்ற கடல்வள விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பேசியதாவது:
உலக புவி அமைப்பில் 71 சதவிகிதம் நீராலும், 29 சதவிகிதிம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. இந்த 71 சதவிகித நீர்ப்பரப்பில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் இதர நீர்; ஆதாரங்கள் போக மீதமுள்ள நீர்பரப்பில் பெருங் கடல்கான பசுபிக் பெருங்கடல், ஆர்ட்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், தென்பெருங்கடல் ஆகிய 5 பெருங்கடல்கள் அமைந்துள்ளன.
இந்தியாவின் கடற்கரை நீளம் சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் ஆகும். அதில் தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் 1076 கிலோ மீட்டர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடற்கரை மாவட்டங்காளகும்.
உலகளவில் 14 தேசிய உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன. அதில் ஒன்றான மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம். அரியவகை உயிரினங்களை எதிர்காலத்தில் பாதுகாத்தல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் 13.10.2015 முதல் 15.10.2015 வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் அரிய வகை உயிரினங்களான கடல் ஆமை, கடல் பசு, கடல் அட்டை, பவளப்பாறைகள், வண்ண மீன்கள், சிப்பி வகைகள், கடல் பாசிகள், சங்குகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட அரிய வகை மீன் வகைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியினை அனைவரும் பார்வையிட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.த.செல்லப்பாண்டியன், தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் முனைவர்.டி.எஸ்.டாங்கே,இ.வ.ப., வன உயிரின காப்பாளர் திரு.தீபக்.எஸ்.பில்கி,இ.வ.ப., மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.ஏ. ராஜீ,இ.வ.ப., உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: