Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in , ,    



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (12.10.2015) தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 100 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 422 புதிய பேரூந்துகள், 18 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, கிராமங்கள் மற்றும் நகர்புறங்கள் விரிவடைந்து வருகின்றன. பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, புதிய பேரூந்து சேவைளை துவக்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடி கிளை சார்பில் 8 பேரூந்துகள், தூத்துக்குடி மண்டலம் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 பேரூந்துகள் என மொத்தம் 20 புதிய பேரூந்துகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய பேரூந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாண்புமிகு மேயர் திருமதி.அ.ப.ரா.அந்தோணி கிரேஸ், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர்.செ.ராஜீ ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் திரு.கே.முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், கோட்ட மேலாளர் திரு.ஜா.ஜெபராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: