Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிறப்பு மருத்துவ முகாம்

சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் சிவகாசி நவதானிய திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது:- தமிழக முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் வளம் பெற எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கி, அவர்களை நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்து அதன் மூலம் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். மேலும் அரசு பணிகளில் பணிபுரிய 15 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், காலிப்பர், செயற்கை கால், செயற்கை கை, காது கேட்கும் கருவிகள், பார்வையற்றோருக்கான கருப்பு கண்ணாடிகள் மற்றும் ஊன்றுகோல்கள், பிரெய்லி கை கடிகாரங்கள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரூ.5½ கோடி நலத்திட்ட உதவிகள்75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரிபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 25,532 நபர்களுக்கு அடையாள அட்டைகளும், 13,017 நபர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். நல வாரிய உறுப்பினர்கள் விபத்தில் மரணமடைந்தால் ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 5,195 நபர்களுக்கு ரூ.5 கோடியே 45 லட்சத்து 47 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.34 லட்சத்து 60 ஆயிரத்து 611 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க 679 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.301 மனுக்கள்முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக 301 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை உடனடியான பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், சிவகாசி நகர்மன்ற தலைவர் டாக்டர் கதிரவன், துணைத்தலைவர் அசன்பதுருதீன், சிவகாசி யூனியன் தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் சுடர்வள்ளி சசிக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கருப்பசாமி, சிவக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிநிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: