Sunday, September 27, 2015

On Sunday, September 27, 2015 by Unknown in , ,    

தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அரசு பொருட்காட்சி தொடக்க விழா 26.9.2015 அன்று வ.உ.சி.கல்லூரி மைதானத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


 இவ்விழாவில் கலந்து கொண்டு அரசுப் பொருட்காட்சியை மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் பேசும்போது தெரிவித்தாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் விதமாக அரசு பொருட்காட்சி நடத்துவதற்கு அனுமதி அளித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சியில் தான் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக உருவாகி உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  பொற்கால ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் தன்னிறைவு பெற்று சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்றுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீட்டை தமிழ்நாட்டுக்கு பெற்று தந்துள்ளார்கள். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.68 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய தொழில் திட்டங்களை துவங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். மேலும், டிசம்பர் மாதத்திற்குள் ரூ.1 கோடியே 87 லட்சம் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி முடிக்கப்பட்டு விடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விடும். இவைமட்டுமன்றி சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்காக விலையில்லா ஆடுகள் இம்மாவட்டத்தில் மட்டும் 56000 ஆடுகளும், 2500 விலையில்லா கறவை மாடுகளும்  வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை மக்களும் பொருளாதாரத்தில் சுயசார்புடன் வாழ்க்கை முன்னேற்றம் பெறுகின்றனர். இந்த அரசுப் பொருட்காட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவற்றை பார்வையிட்டு அரசின் திட்டங்களை அறிந்து முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 850 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து பொருட்காட்சியில் அமைச்சப்பட்டு இருந்த 27 அரசு துறை அரங்குகளையும், 6 அரசு சார்பு நிறுவன அரங்குகளையும் பார்வைளயிட்டார்.
      இவ்விழாவில் மாண்புமிகு மேயர் திருமதி.அ.ப.ரா.அந்தோணி கிரேஸ், மாநிலங்களவை உறுப்பினர் திருமதி.எல்.சசிகலா புஷ்பா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.த.செல்லப்பாண்டியன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர்.செ.ராஜீ, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜீ.வி.மார்க்கண்டேயன், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், அரசு வழக்கறிஞர் திரு.பி.சேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
      முன்னதாக இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) திரு.எழிலகன் அவர்கள் திட்ட விளக்கவுரையாற்றினார். நிறைவாக செய்தித்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) திரு.தாணப்பா அவர்கள் நன்றி கூறினார்.

0 comments: