Sunday, September 27, 2015

On Sunday, September 27, 2015 by Unknown in , ,    
           பிரதம மந்திரியின் சிறப்பு திட்டமான 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' திட்டம் மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களாhல் குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில்கள் மற்றும் சேவைத் தொழில்களில், துவங்குவதற்கும் சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் குறைந்த வட்டியில் சொத்து பிணையம் இன்றி வங்கியில் கடன் பெறும் விதமாக நாடு முழுவதும்  08.04.2015 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

            திட்டத்தின் சிறப்பு அம்சமாக ;சிசு' பிரிவில் ரூ.50,000ஃ- வரை கடன் பெற சொத்து பிணையம் மற்றும் மனு பரிசீலனை கட்டணம் ஏதுமில்லை. மாத வட்டி ரூ.100ஃ-ற்கு ரூ.1 மட்டுமே. திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் ஆகும். நடைமுறை மூலதனம் 'முத்ரா' அட்டையின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 'கிஷோர்' மற்றும் ரூ.10.00 இலட்சம் வரையிலான இனம் தவிர ரூ.5.00 இலட்சம் வரையிலான 'தருண்' திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

            தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கடன் முகாம் 28.09.2015, திங்கள்கிழமையன்று தெற்கு பீச் ரோடு, பெல் ஹோட்டலில் காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அனைத்து வங்கியாளர்கள், மாவட்டத் தொழில் மையம், தாட்கோ போன்ற மாநில அரசு துறைகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சயர் அவர்கள் துவக்கி வைத்து ஒப்பளிப்பு ஆணையினை வழங்கவுள்ளார்கள்.

           ஆர்வமுள்ள குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.ரவி குமார், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

0 comments: