Monday, November 23, 2015

On Monday, November 23, 2015 by Unknown in , ,    

தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் தூத்துக்குடி, மாவட்டத்தை சார்ந்த 2698 பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கத்தினையும், 10,61கோடி நிதியுதவியினையும் வழங்கினார்.
        பின்னர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் பேசும் போது தெரிவித்தாவது:
        இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. பெண்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், கிராமப்புற மகளிரின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம், மகளிரின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கத்துடன் 25ஃ50 ஆயிரம் உதவித்தொகை, கர்ப்பினி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் மகப்பேறு உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணனி, விலையில்லா மிதிவண்டி, முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டுத் திட்டம், என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்கள்.  தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 17907 பயனாளிகளுக்கு 71.62 கிலோ திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் ரூ.64.27 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. அரசின் நல திட்ட உதவிகளை பெறுகின்ற மக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.
      இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.விஜயகுமார், சமூகநலத்துறை அலுவலர் (பொ) திருமதி.இரா.ஆனந்த வள்ளி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்; திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: