Monday, November 23, 2015

On Monday, November 23, 2015 by Unknown in , ,    
            தூத்துக்குடி மாநகராட்சிகுட்பட்ட ஆதிபராசக்தி நகர் மற்றும் ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை  21.11.2015 அன்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்  ஆய்வு செய்து உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார் .

          மழைநீர்  சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்த பல்வேறு குடும்பங்களை உடனடியாக மீட்டு பேருந்து மூலம் அழைத்துசென்று அருகிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்  தங்கவைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு உடனடியாக உணவு வழங்கப்பட்டு முதலுதவி உள்பட மருத்துவ பரிசோதனை செய்திட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்   என மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அனைத்து இடங்களிலும் தேங்கி நிற்கும் மழைநீரை மோட்டார்கள் மூலம் விரைந்து வெளியேற்றிவிடவும் உத்தரவிடப்பட்டது. தண்ணீர் தேங்கியிருந்தால் கொசு உற்பத்தியாகி பல நோய்களுக்கு வழிவகுக்கும் எனவே சுகாதாரத்துறையினர் 24மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும், வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.

            மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24மணிநேரமும் செயல்பட்டுவரும் மழையினால் ஏற்படும் சேதம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பேரிடர் மேலாண்மை அலகின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 1077க்கு வரும் அழைப்புகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

          இவ்வாய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் , மாண்புமிகு மாநகராட்சி மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ்,மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகைய்யா,தூத்துக்குடி வட்டாச்சியர் திரு.சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்;.

0 comments: