Monday, November 30, 2015
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அனல்மின்நிலைய ஊழியர் வீட்டில் 72 பவுன் நகைகளை மர்ம நபரகள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, காமராஜர் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு நெல்லையாளன் (68). ஓய்வு பெற்ற அனல்மின்நிலைய ஊழியர். மேலும், பாஜகவின் மூத்தோர் பிரிவு தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி பாப்பு சுந்தரி. சமீபத்தில் பெய்த கனமழையால் காமராஜர் நகர் குதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து சங்கரசுப்பு அவரது மனைவியுடன், சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இன்று காலை சங்கரசுப்பு வீடுதிரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 72 பவுன் நகைகள் மற்றும் ரூ. 6 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment