Friday, November 20, 2015

On Friday, November 20, 2015 by Unknown in , ,    
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களது பிரச்சனைகளை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பிரச்சனைகள், அதாவது வெளிநாடு சென்றவரிடமிருந்து தகவல் ஏதுமில்லாத இனங்கள், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்தல், வெளிநாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இனங்கள், இறந்த வகைக்கு அல்லது காயமடைந்தவர்கள் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கேட்டல், வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருதல் போன்றவை தொடர்பான விவரங்களை, சம்பந்தப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், மேற்படி நபர்கள் தொடர்பான விரங்களை பதிவு செய்ய ஏதுவாக வலைத்தளம் (Website) செயல்படுத்தப்பட்டுள்ளது. 

http://org2.passportindia.gov.in/AppConsularProject/welcomeLink என்ற அந்த வலைத்தளத்தில் மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் ஏதும் தேவையெனில் வெளிநாட்டில் வாழும் இந்தியர் குறித்த விபரங்களை பதிவு செய்து, அவ்வப்போதுள்ள நிலவரத்தினை மேற்படி வலைத்தளம் மூலம் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். இந்த வலைதளத்தில் பதிவு செய்ததும், புகார்தாரர்களின் புகார் விபரம் அந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படும். பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 comments: