Thursday, December 10, 2015
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி பீச் ரோட்டில் நேற்று போலீஸ் எஸ்.ஐ ஜீவமணி தர்மாஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நான்கு கார்களில் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர். இதில் இரண்டு அரிவாள், மூன்று வாள்கள் வைத்திருந்தனர். துப்பாக்கி வைத்திருந்ததாக தெரியவந்தது. ஆனால் போலீசார் இதனை மறுத்துள்ளனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அசோகன் (46),சக்தி வினாயகர் நகர், ஸ்டேட்பாங்க் காலனி தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது இவர் மதுரை திடீர் நகரில் உள்ள பாஸ்கரதாஸ் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள சைக்கிள் ஸ்டான்ட், கழிப்பறை உள்ளிட்டவைகளை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த தொழில் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் ஏ.சி.அருணாவை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்.
இவர் மீது புதுக்கோட்டை, தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம்,தட்டப்பாறை போலீஸ் ஸ்டேஷன்களில்,கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் நி<லுவையில் உள்ளன. இவருடன் வருகை தந்த தூத்துக்குடி டி.எம்.பி., காலனியை சேர்ந்த மனோகரன் (45), அய்யப்பன் (45), மதுரை, ஆனையூர், முத்துநகரை சேர்ந்த ளேந்திரன் (40), தூத்துக்குடி ஜெயிலானி தெருவை சேர்ந்த பழனிவேல் (46), மில்லர்புரத்தை சேர்ந்த ராகவானந்தம் (47), ஆகிய அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில் நடந்த அந்த சினிமா விருதுவிழாவில் விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர். அந்த நடிக...
-
உடுமலை,: உடுமலை நேதாஜி மைதானத்தில் தென்னிந்திய கபடி போட்டி இன்று துவங்கி 26ம் தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி,...
0 comments:
Post a Comment