Friday, December 18, 2015

On Friday, December 18, 2015 by Tamilnewstv in    
இரத்த தான முகாம்
    திருச்சி தேசியக் கல்லூரியிலுள்ள நங்கவரம் பெரியபண்ணை அரங்கில் 18.12.2015                   (வெள்ளிக் கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு இரத்த தான முகாம் துவங்கி மதியம் 2.00 மணி வரை நடந்தது. முகாமை தேசியக் கல்லூரியின் தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினர் ஏற்பாடு செய்தனர். முகாமில் கல்லூரி முதல்வர் முனைவர் கே. அன்பரசு தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் டி. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் ரத்ததானம் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும்ää தேசியக் கல்லூரியின் தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினரின் சமுதாயத் தொண்டையும் பாராட்டிப் பேசினார்.  இது போன்ற சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய பல நல்ல செயல்களை தேசியப்படை (விமானப்பிரிவு) மாணவர்கள் செய்ய வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக கல்.லூரியின் தேர்வு நெறியாளரும்ää தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படை அதிகாரியுமான ஸ்க்வாட்ரன் லீடர் (ளுஙரயனசயn டுநயனநச) முனைவர் ஆர். சுந்தரராமன்; வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமில் 75 நபர்கள் இரத்ததானம் செய்தனர். பிளைட் கேடட்; சஹானாதேவி நன்றி கூறினார். முகாமில் திரளான தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினர்ää இந்திய விமானப்படை வீரர்கள்ää பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிகழ்ச்சிகளை பிளைட் கேடட் லோகே~; தொகுத்து வழங்கினார்

0 comments: