Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது                                       க.பரமத்தி அருகேயுள்ள விசுவநாதபுரி ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 83 மனுக்கள் பெறப்பட்டது. 

க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் தலைமையிலான இந்த முகாம் தொடக்க விழாவில் க.பரமத்தி ஆர்ஐ சௌந்தரவள்ளி வரவேற்றார். அரவக்குறிச்சி தாசில்தார் உதயகுமார் தலைமை வகித்தார். 
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சிவகுமார், ஊராட்சி துணைத் தலைவர் ராமாயி பழனிச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகி கருப்பண்ணன் முன்னிலை வகித்தனர். முகாமை ஊராட்சி தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். 
முகாமில் வாரிசு சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா,  வீட்டு பட்டா மனு, முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை, புதிய ரேஷன் கார்டு, விதவை, கணவரால் கைவிடப்பட்ட மக்கள் உள்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 83 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் மனுக்களை பெற்று கொண்ட அரவக்குறிச்சி தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் இந்த மாத இறுதியில் அனைத்து மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றார். 

முகாமில் விஏஓவினர் கதிர்வேல், வேலாயுதம் கோபாலகிருஷ்ணன், சசிகலா, வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விசுவநாதபுரி விஏஓ (பொ) வேலாயுதம் நன்றி கூறினார்.                                     

0 comments: