Friday, December 18, 2015

On Friday, December 18, 2015 by Unknown in , ,    
கடந்த 4 நாட்களாக மழை இல்லாமல் இருந்த தூத்துக்குடியில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் தூத்துக்குடி , முள்ளக்காடு, முத்தையாபுரம், புதுக்கோட்டை, மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.   தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் தெப்பகுளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுபோல் காய்கனி மார்க்கெட், பிரையண்ட் நகர் காவலர் குடியிருப்பு பகுதி போன்ற, அண்ணா நகர், திரேஸ்புரம், பூபால்ராயர்புரம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.  

இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியபடி பயணிக்கின்றன. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறதுதூத்துக்குடியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 18.12.2015 மற்றும் 19.12.2015 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாள கன மழை பெய்வதற்கான (Isolated Heavy Rainfall) வாய்ப்புகள் இருக்குமென்று தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு அவ்வாறு கனமழை பெய்து வெள்ளம் சூழக்கூடிய நேரங்களில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் தங்களது அருகில் உள்ள வரவேற்பு மையங்களை பயன்படுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவசர காலங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 ஐ பயன்படுத்தி தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 comments: