Thursday, December 17, 2015

On Thursday, December 17, 2015 by Unknown in , ,    
சமூக அநீதிகளுக்கு எதிராக போராடும் சிறந்த சுய உதவிக்குழுக்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.. இதற்கு வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண்களுக்கு எதிராக நடைபெறும் பெண் சிசுக் கொலை, குழந்தை திருமணம் வரதட்சணைக் கொடுமைகளை போன்ற சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் போராடி வருகின்றனர். இவ்வாறான சமூக அநீதிகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக ஒன்று கூடிப் போராடும் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2015-2016ம் ஆண்டிற்கு மாநில அளவில் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1,00,000/- ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதிற்கான அடிப்படை மதிப்பீடு மற்றும் தகுதிகள்:

1. அனைத்து சுய உதவிக்குழுக்களும் அரசால் உருவாக்கப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

2. சுய உதவிக்குழுக்கள் இணைந்து குறைந்தது 5 ஆண்டுகளாவது நிலைத்த தன்மையுடைனவாய் விண்ணப்பிக்கும் போது இருத்தல் வேண்டும்.

3. சமூக அநீதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தனித்துவம் வாய்ந்ததாக இருத்தல் வேண்டும்.

4. சமூக அநீதிகளுக்கு எதிராக தனித்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் அடங்கும்.
  • பொதுமக்கள் மத்தியில் சமூக அநீதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அளித்தல்.
  • வரதட்சனை, குழந்தை திருமணம் போன்ற தண்டனைக்குரிய செயல்களை எதிர்த்து கிராமத்தில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையோ அல்லது வெளியிலோ நடவடிக்கை எடுத்தல்.
  • கிராம அளவிலான நிறுவனங்களுடன் இணைந்து சமூக அநீதிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருத்தல்.
எனவே தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை 30.12.2015க்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு அனுப்பவும். மேலும் தகவலுக்கு அலுவலக தொலைபேசி எண்:0461-2341282-ஐ தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

0 comments: