Thursday, December 17, 2015

On Thursday, December 17, 2015 by Tamilnewstv in    


        தேசியக்கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்னும் தேசியக்கருத்தரங்கு தொடக்க விழா 1712 2015 காலை 930 மணியளவில் இனிதே தொடங்கியது. தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் பி.செல்வக்குமாரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் சூ.செபாஸ்டின் சே.ச. அவர்கள் தலைமை உரையாற்றினார். தமிழிலக்கியத்தில் அறம் பற்றி பல கருத்துக்களை எடுத்துரைத்தார். தமிழே அறம்தான் என்ற கூற்றை முன்மொழிந்தார். அந்நிகழ்வைத் தொடர்ந்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மாண்பமை முனைவர் க.பாஸ்கரன் அவர்கள் ஆய்வுக்கோவையை வெளியி்ட முதல் பிரதியைக் கல்லூரிச் செயலர் பெற்றுக் கொண்டார்.  பின்னர் துணைவேந்தர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இதனையடுத்து சென்னை இலயோலா கல்லூரி வணிக மேலாண்மை நிறுவனத்தின் ஆலோசகர் முனைவர் ம.விக்டர் லூயிஸ் அந்துவான் அவர்கள் மையக்கருத்துரை வழங்கினார். தமிழில் உள்ள பல அற இலக்கியங்களை மேற்கோள் காட்டியும் வரலாற்று நிகழ்வுகளையும், நடப்பு நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டி அறம் என்பதைப் பற்றி விளக்கவுரையாற்றினார்.  இறுதியில் தமிழாய்வுத்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் பொன்.புஷ்பராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை அறக்கட்டளை செயலர் முனைவர் செ.கென்னடி அவர்கள் நெறிப்படுத்தினார்.

0 comments: