Wednesday, December 16, 2015

On Wednesday, December 16, 2015 by Unknown in , ,    
திருச்செந்தூர் பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழியில் உள்ள காயாமொழி குளம் நிரம்பியது. தொடர்ந்து குளத்திற்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதிகரித்ததால் நீர்வரும் கால்வாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் மேலஅரசூர் நடுநாலுமூலைக்கிணறு காயாமொழிக்கிடையேயான சாலையில் நீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதுகுறித்து எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர் அப்பகுதியை ஆய்வு செய்து, கால்வாய் உடைப்பினை சரிசெய்ய சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பொதுமக்கள் இந்த குளத்தில் முறையாக தூர்வாரப்படவில்லை என்றும் அதனாலேயே தண்ணீர் குளத்திற்கு செல்ல வழியில்லாமல் கால்வாய் உடைந்தது. வருடாவருடம் மழை வரும் காலங்களில் இப்படித்தான் நடக்கிறது. இனி வரும் காலங்களிலாவது இதனை முறையாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் வரும் காலங்களில் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார்.
அவருடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் (திருச்செந்தூர்) செங்குழி ரமேஷ், (உடன்குடி) பாலசிங், திருச்செந்தூர் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, ஒன்றிய தொழிலாளர் அணி துணைச்செயலாளர் ராஜமோகன், உடன்குடி ஒன்றிய பொருளாளர் வாசகன், தென்திருப்போரை டவுன் பஞ்சாயத்து தலைவர் ராமஜெயம், பஞ்சாயத்து தலைவர்கள் வரண்டியவேல் ஜனகர், அழகப்பபுரம் கண்ணன், அமிர்தலிங்கம், பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, வழக்கறிஞர் கிருபா ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments: