Monday, December 21, 2015

On Monday, December 21, 2015 by Unknown in , ,    
ஊரக பகுதிகளில் வாழும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா பயிற்சி திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 120 பயனாளிகளுக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சமையற்கலை, கணினி, ஜே.சி.பி ஓட்டுனர் போன்ற பயிற்சிகள்; வழங்கப்பட்டன. 3 மாத காலத்தில் 576 மணி நேரத்தில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பறை பயிற்சி, செய்முறை பயிற்சி பணியிட பயிற்சி ஆகிய 3 பிரிவுகளாக வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வருகை புரிந்த நாள் ஓன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.7200 வரை விடுவிக்கப்பட்டுள்ளது.
அதில் முதற்கட்டமாக கணினி பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 30 பயனாளிகளும் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு மத்திய அரசின் திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறையின் மூலம் இன்று மாவட்ட ஆட்சியர் திரு. எம். ரவி குமார் இ.ஆ.ப., அவர்களால் தேர்ச்சி சான்றிதழ் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற அதே துறையில் 3 மாத கால பணி நிறைவுற்றதும் அவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். வருகின்ற நிதியாண்டிலும் இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திட்ட இயக்குனர்
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
மகளிர் திட்டம்
2வது தளம், மாவட்ட ஆட்சியரகம்
தூத்துக்குடி
தொலைபேசி 0461

0 comments: