Thursday, January 14, 2016

On Thursday, January 14, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வி (வயது 10). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் மணியாச்சியில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த செல்வியை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகனும் பிளஸ்–1 மாணவருமான அருண் (17) என்பவர் சிறுமியிடம் தின்பண்டங்கள் வாங்கித்தருவதாக கூறி அருகே உள்ள கோவில் பின்புற பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவர் அருண், செல்வியை கற்பழிக்க முயன்றார். 
அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்களை பார்த்த அருண் மாணவியை விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கடம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் அருணை கைது செய்தனர்.

0 comments: