Thursday, January 14, 2016

On Thursday, January 14, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் உள்ள ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, எம்.ஜி.ஆர் பூங்கா, முயல்தீவு, முத்துநகர் கடற்கரை, துறைமுக கடற்கரை ஆகிய பகுதியில் பொங்கல் மற்றும் கரிநாளை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் கூடிமகிழ்வர். 
எனவே தூத்துக்குடி மேயர் அந்தோணி கிரேஸ் ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காவையும் புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளார். 
மேயரின் உத்தரவின் பெயரில் பூங்காவில் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள், இருக்கைகள் ஆகியவற்றை சரிசெய்து வண்ணம் பூசி, செடிகளை வெட்டி, அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நேரில் சென்று மேயர் பார்வையிட்டார். இதில் அ.தி.மு.க. வட்டசெயலாளர் முருகன், மேயரின் நேர்முக உதவியாளர் துரைமணி, ஹரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: