Saturday, January 30, 2016

On Saturday, January 30, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணக்காடு வன்னிமா நகரத்தைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி, இவருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
2–வது மகன் சிவகுரு (வயது 30). இவருக்கு திருமணமாகவில்லை. விவசாயம் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுருவின் பெற்றோர் இறந்து விட்டனர். எனவே சிவகுரு தனது சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுரு தனது மோட்டார் சைக்கிளிள் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் காலை பக்கத்து ஊரான சண்முகபுரத்தில் இருந்து ராணி மகராஜாபுரம் சாலையின் அருகில் காட்டுப்பகுதியில் சிவகுரு தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளிலும் தனியாக கிடந்தது. சிவகுருவின் தலையில் கல்லால் தாக்கி அவரை மர்ம நபர்கள் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுருவை கொலை செய்தது யார்? சொத்து தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ், உத்தரவின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக வன்னிமாநகரம், தளவாய்புரம் பகுதிகளை சேர்ந்த சிவகுருவின் நண்பர்கள் 10 பேரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடைசியாக சிவகுருவின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என டி.எஸ்.பி. கோபால் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கொலையாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் அவர்களை கைது செய்வோம் என்று கூறினார்.

0 comments: