Friday, January 29, 2016

On Friday, January 29, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும் அம்மா மக்கள் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வரின் சீரிய திட்டமான அம்மா மக்கள் சேவை மையம் தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்டது. இத்திட்டம் தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களிலும் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் விண்ணப்பங்கள் மூலம் தங்கள் குறைகளை மண்டல அலுவலகங்களில் கொடுக்கலாம். 

பொது மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கு கணினி மூலம் பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் கைப்பேசியில் குறுந்தகவல் மூலம் பொது மக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களின் நிலை என்ன என்பது தெரிவிக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸ் தலைமை தாங்கினார். 

மண்டல உதவி ஆணையாளர்கள் (பொ) சரவணன், சுப்புலெட்சுமி, ரவீநாதன், (பொ)கல்யாண சுந்தரம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பெருமாள்தாய், மகாலெட்சுமி, சாந்தி, முப்பிடாதி, மெஜீலா, சந்திரா செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், சர்மிளா அருள்தாஸ், பொன்ராஜ், சரவணன், ஆனந்தகுமார், சகாயராஜ், கமலக்கண்ணன், ஜெயக்குமார், தனராஜ், செல்வராஜ், தவசிவேல், மனோகர், சுடலைமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: