Thursday, January 21, 2016

On Thursday, January 21, 2016 by Unknown in , ,    
திருச்செந்தூர் பகுதியில் 2 குழந்தைகளிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

திருச்செந்தூர் கீழவெயிலு கந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் (37). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக தனது கைக்குழந்தையுடன் சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சிறுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடியுள்ளான். குழந்தையின் கழுத்தில் கிடந்த நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கந்தன் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுபோல் மதுரை நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (32). இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். தனது கைக்குழந்தையுடன் ஜெயபால் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டு தப்பி விட்டான். இதுகுறித்து ஜெயபால் திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்கள், நகைகள், குழந்தைகள் காணாமல் போவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் முறையாக கண்காணிப்பில் ஈடுபடாமல் மெத்தனம் காட்டி வருவதால் பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட மிரண்டு போய் உள்ளனர். 

0 comments: