Thursday, January 21, 2016

On Thursday, January 21, 2016 by Unknown in , ,    
குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளை பராமரிப்பதற்கு, வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் தேவைப்படுவதாக, ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இது தாெடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வளர்த்து பேணுதல் வழிகாட்டுதல் 2015-ன்படி இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களில் உள்ள தத்துக் கொடுப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் குழந்தைகள் இல்லங்களில் தங்கும் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கண்டறியப்பட்டு, இக்குழந்தைகளை குடும்பச் சூழலில் வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிட வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் தேவைப்படுகிறது.

வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் - என்பவர் சொந்த குழந்தைகள் இருந்தோ அல்லது தத்து எடுப்பதற்கு உரிய தகுதிகள் இருந்து தத்தெடுப்பிற்கு பதிவு செய்து காத்திருப்போர்களாக இருப்பவர்கள் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் யார் வேண்டுமானாலும் உரிய நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பில் குழந்தைகளை வளர்க்கலாம். சமுதாயத்தில் உள்ள குழந்தைகளில் பெற்றோர்கள் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் அல்லது பெற்றோர் இன்றி தவிக்கும் குழந்தைகளை - வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் என்ற வகையில் பராமரிப்பு செய்ய தயார் நிலையில் உள்ளவர்கள் நேரடியாக பின்கண்ட முகவரியில் செயல்படும் குழந்தைகள் நலக்குழு தலைவர் / உறுப்பினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளை அணுகலாம்.

வளர்ப்பு பராமரிப்பு காலங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நிதி உதவி தேவைப்படும் வளர்ப்பு பராமாரிப்பு பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் அல்லது குழந்தையின் 18 வயது முடியும் வரை வளர்ப்பு பாரமாரிப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும். 

விண்ணப்பம், நிபந்தனைகள், நடைமுறைகளை பெற்றோர்கள், அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும், http://wcd.nic.in. என்ற இணையதளத்திலிருந்து Model Guidelines for Foster Care, 2015 - India என பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு: தலைவர், குழந்தைகள் நலக்குழு, 176, முத்துக்குவியல் பில்டிங், மணிநகர், பாளைரோடு, தூத்துக்குடி 628 003. கைப்பேசி எண்: 9366700579

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு 176, முத்துச்சுரபி பில்டிங், மணிநகர், பாளைரோடு, தூத்துக்குடி 628 003. கைப்பேசி எண்: 9488433375

0 comments: