Friday, January 15, 2016

On Friday, January 15, 2016 by Tamilnewstv in    


திருச்சி அல்லிதுறையில் ஜல்லி கட்டு விளையாட்டின் மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாடுபிடி வீரர்களும் பொதுமக்களும் காளைகளுடன் ஆர்ப்பாட்டமும் பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்

திருச்சி  ஐல்லிகட்டுக்கு உச்சநீதி மன்றம் விதித்துள்ள தீர்ப்பை கண்டித்தும் மற்றும்  விலங்குகள் அமைப்பான பீட்டா அமைப்பை கண்டித்தும்  ,திருச்சி அல்லிதுறையில்  நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தியும் பெண்கள் ஒப்பாரி வைத்தும்  காளைகளுடன் கருப்பு கொடி ஏந்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




தமிழக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டு தடை கோரி வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன இந்நிலையில்  திருச்சிமாவட்டம். சோமரசம்பேட்டையை அடுத்த அல்லிதுரையில் ஜல்லிக்கட்டு வீரர்கள்,  காளை வளர்ப்போர்  மற்றும் பொதுமக்களும் அப்பகுதியில் உள்ள பூஜை மண்டபம் என்ற இடத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் கருப்புகொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்போது அப்பகுதி பெண்கள் ஒப்பாரிவைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது தமிழர்களின் வீர விளையாட்டை தடைசெய்யாதே, தமிழர்களின் பாரம்பரியத்தை அளிக்காதே எனவும், ஜல்லிகட்டுக்கு தடை விதித்த  உச்சநீதிமன்றத்தை கண்டித்தும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை கண்டித்தும் கண்டன முழக்கமிட்டனர்.
பேட்டி - திரு. பழனியாண்டி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்

0 comments: