Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
உசிலம்பட்டியில் பஞ்சமி நிலங்களையும், கள்ளர் கண்டிஷன் ஜாதி நிலத்தையும் மீட்டெடுத்து, உழுவதற்கு நிலம் இல்லாதவர்களுக்கும், குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கும், குறைந்த பட்சம் ஒவ்வொருவருக்கும் தலா 20 சென்ட் பகிர்ந்து அளிக்கவேண்டும், என உழைக்கும் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக 1000–த்திற்கும் மேற்ப்பட்ட பெண்கள் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர், விவசாயிகள் இயக்கத்தலைவர் பாஸ்கரன், நிலஉரிமை கூட்டமைப்பு உறுப்பினர் சாமி, மாவட்ட அமைப்பாளர் கருப்பசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச்செயலாளர் செல்லக்கண்ணு உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள், பெண்களை ஒருங்கிணைப்பு செய்த மஞ்சுளா,மீனா, ஆகியோர் ஆர்ப்பாட்டம் முடிந்து ஆர்.டி.ஓ. விடம் கோரிக்கை மனு அளித்தனர். உசிலம்பட்டி ஆர்.டி.ஓ பாலசுப்பிரமணியன் உரியநிலங்கள் இருந்தால் கண்டிப்பான முறையில் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

0 comments: