Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    

ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்த நோய் நம் நாட்டில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக விமான நிலையங்களில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளிடம் நோய் தொற்று உள்ளதா என் கண்காணிக்க அங்கு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் யாருக்காவது இந்த நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டால் உடனே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மதுரை டீன் சாந்தகுமார் கூறியதாவது:–
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எபோலா வைரஸ் தாக்கியவர்களின் சிகிச்சைக்காக 4 தனிப்பிரிவும், 12 படுக்கைவசதி கொண்ட பிரிவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவு, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத தனிப்பிரிவு ஆகும். எப்போலோ வைரஸ் தாக்கியவர்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கவே இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments: