Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
அவனியாபுரம் அருகே உள்ள வைக்கம்பெரியார் நகரை சேர்ந்தவர் செய்யது ரியாஸ் (வயது45). இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இன்று காலை வேலையை முடித்துவிட்டு செய்யது ரியாஸ் வீடு திரும்பினார். வீட்டின் அருகே நடந்து வந்த அவர், வைக்கம்பெரியார் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மாட்டுத் தாவணியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் செய்யது ரியாஸ் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.

0 comments: