Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
Displaying N1.jpgDisplaying DSC_0818.jpg
Displaying DSC_0065.JPGDisplaying DSC_0064.JPG  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.முல்லைப் பெரியாறு அணையின் மூலம் பாசனம், குடிநீர் வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் மூலம்  5 மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் உயரம் 158 அடி. இதில், 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். ஆனால், அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி, நீர்மட்டத்தை 136 அடியாக கேரள அரசு குறைத்துவிட்டது.இதை எதிர்த்து, தமிழக அரசு மேற்கொண்ட நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், அணையின் அடைப்பான்கள் கீழே இறக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைந்து வரும் சூழலில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் வழக்கமாகக் கிடைக்கும் தண்ணீர் கிடைக்காததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தில் அதிகம் பயன்பெறும் மதுரை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படுவதால், பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் உரிமை காக்கப்பட்டதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில், வரும் 22-ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.சிவகங்கை சாலை சந்திப்பு அருகே, மாநகராட்சி சுற்றுச்சாலைப் பகுதியில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.இந்த விழாவிற்கான  மேடை அமைக்கும் பணிகளை   தமிழக அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் ஆர். விசுவநாதன், செல்லூர் கே. ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் .மேயர் ராஜன் செல்லப்பா எம் எல் ஏக்கள் தமிழரசன் ,முத்துராமலிங்கம் ,கதிரவன் ,துணை மேயர் திரவியம் ,வழக்கறிஞர் ரமேஷ் ,உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்

0 comments: