Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
மேலூர் கல்வி மாவட்ட அளவிலான ஆ குறுவட்ட விளையாட்டு போட்டிகள் இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்தாண்டுக்கான விளையாட்டு போட்டிகளை இந்த பள்ளி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியை மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பெனடிக்ட் தர்மராய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். இதில் மதுரை இளங்கோ மாநகராட்சி பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
நேற்று பள்ளியில் கேரம் போட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, டி.வி.எஸ்.பள்ளி, மகாத்மா பள்ளி உள்பட 15 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் இரட்டையர் பிரிவில் இளமனூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி முதலிடம் பெற்றது. களிமங்கலம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணன் நடுவராக போட்டிகளை நடத்தினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துராஜா, ஜீவநேசன், மச்சராஜா, சிவகுரு, அசோக்பாண்டி, ஜெகதீஸ்வரன், ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் பிரிவு போட்டிகளை நடத்தினர். இதேபோல கருப்பாயூரணி அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகேந்திரபாபு, செல்லத்துரை செய்திருந்தனர்.

0 comments: