Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    

சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு செல்லும் சாலையின் ஒரு பகுதியை வெள்ளைச்சாமி என்பவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளார். இதனால், காலனிக்கு மக்கள் செல்ல இடையூறாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர், திருப்பத்தூர் தாசில்தாருக்கு 4.2.2014 அன்று மனு கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பஞ்சாயத்து தலைவர் ரா.கண்ணன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தேவகோட்டை உதவி கலெக்டர், திருப்பத்தூர் தாசில்தாருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், மனுதாரர்கள் கூறுவது போன்ற ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. அந்த கடித நகல் எனக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உத்தரவுப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் 4.2.2014 அன்று கொடுத்த மனுவை திருப்பத்தூர் தாசில்தார் 3 மாதத்துக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையின் போது இருதரப்பினரும் உரிய விளக்கம் கொடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

0 comments: