Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    


மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கல்லுப்பட்டியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் திருமங்கலம் அருகே உள்ள கண்டுகுளத்தை சேர்ந்த செல்வப்பாண்டி என்பவர் மேலாளராக உள்ளார். சம்பவத்தன்று அந்த இளம்பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது, செல்வபாண்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு உடந்தையாக அங்கு பணிபுரியும் மீனா (38) என்பவர் இருந்துள்ளார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த இளம்பெண் கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

0 comments: