Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் தயாரான 'ஸ்டாண்ட் அலோன்' எனும் அவுட்டோர் ரிங் ரோடு திட்டம் வரைபடம் தயாரிக்கப்பட்டதோடு மூடு விழா கண்டுள்ளது.

ஆக்கிரமிப்பும், அபகரிப்பும் நிறைந்த மதுரை ரோடுகளிலிருந்து வாகன ஓட்டிகளை மீட்க எண்ணற்ற வழித்தட திட்டங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கனரக வாகனங்களின் நெருக்கடியை குறைக்க 2000ல் ரிங் ரோடு திட்டத்தை அறிமுகம் செய்தனர். 14 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை அத்திட்டம் முழுமை பெறாமல் அரை வட்டமாக பாதியில் நிற்கிறது. இப்போது தான் அதை விரிவாக்கம் செய்வதற்கான அறிவிப்புகள் வெளியாகி கணக்கெடுப்பு பணிகளும் முடிந்துள்ளன. அதிகரிக்கும் வாகனங்களால் ரிங் ரோட்டால் மதுரையின் நெரிசல் குறையவில்லை. அதற்கு மாற்று வழி கண்டறிய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கடந்த 2010ல் ஒரு திட்டத்தை கையில் எடுத்தது. அதுதான் 'ஸ்டாண்ட் அலோன்' எனும் அவுட்டோர் ரிங் ரோடு திட்டம்.

72 கி.மீ., நீளமுள்ள இத்திட்டம் திண்டுக்கல் ரோடு செம்பக்குடிபட்டி அருகே தொடங்கி திருமங்கலம் ஆலம்பட்டி அருகே தென்காசி ரோட்டில் இணைகிறது. தனிச்சியம்-அலங்காநல்லுார் ரோடு சந்திப்பு, நத்தம் ரோட்டில் கருவனுார், அழகர்கோவில் ரோட்டில் சுந்தராஜன்பட்டி, மேலுார் ரோட்டில் கொடிக்குளம், சிவகங்கை ரோட்டில் ராஜாக்கூர், ராமேஸ்வரம் ரோட்டில் சிலைமான், நெடுங்குளம் ரோட்டில் பொட்டப்பாளையம், அருப்புக்கோட்டை ரோட்டில் வலையங்குளம், விருதுநகர் ரோட்டில் மேலக்கோட்டை வழியாக வந்து தென்காசி ரோட்டில் நிறைவு பெறுகிறது.இது குறித்து தனியார் ஆலோசனை நிறுவனத்தின் கருத்துக்களை பெற்று வரைபடமும் தயாரானது. அதன் பின் திட்டத்தை தொடங்குவதற்கான ஒரு துரும்பு கூட நகர்த்தப்படவில்லை. இதனால் வரைபடம் தயாரானதோடு திட்டம் மூடுவிழா கண்டது.

நெருக்கடியில் விழி : பிதுங்கும் மதுரைக்கு இதுபோன்ற திட்டம் வரப்பிரசாதம். தவிர திண்டுக்கல், திருச்சி மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மதுரையின் நெருக்கடியான ரோடுகளில் சிக்காமல், நெரிலை ஏற்படுத்தாமல் காலவிரையமின்றி பயணிக்கலாம். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மனது வைத்தால் மட்டுமே இதற்கு விடிவு கிடைக்கும்.

இதன் திட்ட இயக்குனர் தங்கவேலு கூறுகையில், ''திட்டம் பரிசீலனையில் இருந்தது உண்மை. வேறு சில காரணங்களால் கிடப்பில் உள்ளது. மீண்டும் அதை தொடங்க விரும்புகிறோம். அதற்கான நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தி வழங்கினால் பாதி திட்டம் நிறைவேறிய மாதிரிதான். அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவோம்,'' என்றார்.

0 comments: