Friday, February 05, 2016

On Friday, February 05, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ஜெயசூரியா. அவருடைய மகன் அசோக் பாபு (53). நிதி நிறுவன அதிபர். இவரிடம், மேலசண்முகபுரம் வண்ணார் 2-வது தெருவை சேர்ந்த பால கணேசன் (40) என்பவர் ஆடிட்டராக உள்ளார். அசோக் பாபு கடந்த 5 வருடமாக வருமான வரி செலுத்தி வருகிறார்.
 
இந்த நிலையில், கடந்த 2014-ல் வருமான வரி செலுத்துவதற்காக, பால கணேசனிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை அசோக்பாபு கொடுத்துள்ளார். ஆனால் பாலகணேசன் அந்த பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக் பாபு தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் ஆடிட்டர் பால கணேசன் மற்றும் அவருடைய மனைவி ரம்யா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

0 comments: