Monday, February 22, 2016

On Monday, February 22, 2016 by Unknown in , ,    
   

     தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல ;தொடர்பான அரசியல் கட்சியினர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார், இ.ஆ.ப.அவர்கள் தலைமையில இன்று(22.02.2016); நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
                  வாக்காளர் பட்டியலினை செம்மை படுத்தும் விதமாக இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்திட 15.02.2016 முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டு வருகிறது.24.02.2016 அன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்து அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் கூட்டம் நடத்திட வேண்டும்.மேற்கண்ட கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கண்டறியப்பட்ட இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர் பட்டியல் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கப்படும். மேற்படி பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து பட்டியலில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கையொப்பம் அளிக்க வேண்டும்.
               இறுதியான நீக்கம் செய்யப்பட உள்ள வாக்காளர்களின் விவர பட்டியல் 25.02.2016 அன்று வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் மாவட்ட இணைய தளத்திலும் வெளியிடப்படும். அரசியல் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களை 24.02.2016 அன்று  வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை சந்தித்து நீக்கம் செய்யப்படவுள்ளவர்களின் பட்டியலை பெற்று சரி பார்த்து கையொப்பமிட அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இதுவரை நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்து அதன் விவரத்தை தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கோள்கிறேன். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

0 comments: