Friday, February 05, 2016

On Friday, February 05, 2016 by Unknown in , ,    
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்கு பதிவின்போது மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு வரும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 1,521 வாக்கு சாவடிகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு வாக்கு பதிவு எந்திரங்கள் தேவை குறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு எந்திரங்கள் தூத்துக்குடிக்கு வர உள்ளதாக கலெக்டர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட 2,300 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களும், 2,300 கட்டுப்பாட்டு கருவிகளும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டன.
கன்டெய்னர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட எந்திரங்களை தாசில்தார் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்து பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அனைத்து எந்திரங்களும் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்கு பதிவு எந்திரங்களை கலெக்டர் ரவிகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யூனியன் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 comments: