Tuesday, March 01, 2016

On Tuesday, March 01, 2016 by Tamilnewstv in    
திருச்சி 1.3.16
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்திப்பு வரை இன்று பாலம் திறக்கப்பட்டது
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளி இரயில்வே சந்திப்பு அருகாமையில் பழைய குறுகிய இரயில்வே பாலம் எண் 1136க்கு பதிலாக கட்டப்பட்டுவருகின்ற மேம்பாலம் அமைக்கும் பணி இரயில்வே திட்டப்;பணிகள் 2009 2010 கீழ் அரசாணை (ட்டி) எண்2 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.க்யூ.2) துறை நாள் 02.02.2011 ல் 74.00 கோடிக்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டு ரூ 81.40 கோடிக்கு விரிவான மதி;ப்பீடு ஒப்புதல் பெறப்பட்டு முதல் கட்ட மேம் பாலப்பணிகள் பிப்ரவரி 2014 பணி  துவங்கப்பட்டது. பண்pமுடிக்க திட்ட காலம் 3 ஆண்டுகள் ஆகும்
இம்மேம்பாலப்பணியில் த்pண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்தி;ப்பு வரை உள்ள பாலப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. இம்மேம்பாலம் திறக்கப்படுவதால் திண்டுக்கல் பழனி கொடைக்கானல் மற்றும் மணப்பாறை பகுதிகளிலிருந்து திருச்சி நகரம் இரயில் சந்திப்பு செல்லும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்பதால் இந்த பாலம் இன்று திறக்கப்பட்டது பாலத்தில் தற்போது திறப்பு விழா ; மேம்பாலப்பகுதி விவரங்கள் பாலப்பகுதியின் மொத்த நீளம் 621.00 மீட்டர் பாலத்திற்கு அரசு செலவிட்ட தொகை 34.24 கோடி மொத்த திட்ட செலவு 34.24 கோடியாகும்.
இந்த பாலம் திறப்பு நிகழ்ச்சியில் தலைமைகொறடா மனோகரன் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது பாலம் திறந்தவுடன் வாகனங்கள் திறந்த பாலத்தின் வழியாக சென்றன.

0 comments: