Saturday, April 16, 2016

On Saturday, April 16, 2016 by Tamilnewstv in    
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புளிக்காத கள்ளை சந்தைப்படுத்த முயன்ற  என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி உட்பட 25 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள்  கைது செய்யப்பட்டனர். 

உலக அளவில் கள் இறக்கவும், பருகவும் தடையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு 29 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம். எனவே தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை  உடனடியாக நீக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். . கேரள அரசு  இந்திய தென்னை வாரியம் மற்றும்  மத்திய அரசின் உதவியுடன் புளிக்காத கள்ளை  "நீராஎனும் பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதை கேரளாவில் இருந்து வாங்கி வந்து திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் கடைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விற்பனை செய்ய முயன்றார்கள்இவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

0 comments: