Tuesday, April 19, 2016

On Tuesday, April 19, 2016 by Tamilnewstv in    
      திருச்சி சமயபுரத்தில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெற்றுது



திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோயில் அம்மன் ஸ்தங்களில் பிரசித்தி பெற்றது. கோயிலில் ஆண்டுதோரும்  பூச்சொரிதல் விழா நடைபெறும் அதேபோல் சமயபுரம் மாரியம்மனே மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறார் அம்மனுக்கு திட உணவு படைப்பது கிடையாது நைவேத்தியமாக துள்ளுமவு இளநீர் பானகம் போன்றவையே படைக்கப்படுகிறது இந்த பச்சைப்பட்டினி விரதம் கடந்த 5ம்தேதி முடிந்தது  இந்த வருடம் காலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது அதிகாலையில் விக்னேஸ்வர பூஜை  புண்ணிய வஜனம் அனுக்ஞை வாஸ்து சாந்தி அங்குரார்பணம்ஆகிய பூஜைகள் நடந்தது அதனை தொடர்ந்து காலை 9மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதன் 10ஆம் நாளான இன்று தொடர்ச்சியாக இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருழுகிறார் மேலும் கோயிலுக்கு வரும் லட்சக்கணக்காண பக்தர்களின் பாதுகாப்பை கருதி; காவல்துறை அதிகாரிகள் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்ப்பாடுகளும் செய்திருந்தனர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திகடன் செழுத்தி வழிபட்டு சென்றனர் 

0 comments: