Monday, May 23, 2016

On Monday, May 23, 2016 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றதுமாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 25 மனுக்களும் குடும்ப அட்டை தொடர்பான 07 மனுக்களு வேலை வாய்ப்பு கோரி 18 மனுக்களும்  முதியோர் விபத்து நிவாரணம் மாற்றுத்திறனாளிகள் நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகைகோரி 30 மனுக்களும் அடிப்படை வசதிகள் கோரி 07 மனுக்களும் புகார் தொடர்பான மனுக்கள் 08 கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 02 மனுக்களும் திருமண உதவித்தொகை இலவச தையல் இயந்திரம் பெண் குழந்தைகள்  பாதுகாப்புத் திட்டம் சலவைப் பெட்டி தொடர்பான 07 மனுக்களும்மற்றும் இதர 36 மனுக்களும் என மொத்தம் 140 மனுக்கள் பெறப்பட்டதுஇம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ் தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்டினாகுமாரி மாவட்ட வழங்கல் அலுவலர் தராஜேந்திரன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

0 comments: