Friday, June 10, 2016
On Friday, June 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
முடி நடும் அறுவை சிகிச்சை மேற்கொண்டபின் உயிரிழந்த பயிற்சி மருத்துவர் சந்தோஷ் குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணி திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் தொடங்கியது.
அழகுக்கலை என்ற பெயரில்,சென்னையில், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும், வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை செய்த டாக்டர், அடுத்த நாளே பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணமான, சென்னையில் உள்ள, ஏ.ஆர்.எச்.டி., என்ற அழகு மையத்தை இழுத்து மூடிய அரசு, மருத்துவக் கவுன்சில் மூலமாக, விதிகளுக்கு முரணாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளது.
'வழுக்கை தலையா... கவலை வேண்டாம்; அரை மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்' என்பது போன்ற விளம்பரங்கள், நகரங்களில் மட்டுமின்றி குக்கிராமங்கள் வரை பரவிவிட்டன.
பெண்கள், 'சிக்கு' முடி வைத்து அலங்காரம் செய்து கொள்வது போல ஆண்களுக்கு விரும்பிய வடிவத்தில், 'விக்' வைத்தல், 'விக்'கை தலையில் ஒட்டிக் கொள்ளுதல் என்ற நிலையைத் தாண்டி, இதய மாற்று சிகிச்சை போல், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும் முடி மாற்று சிகிச்சையும், சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது.
இதற்காக, பிரபலமான மருத்துவமனைகளில் மட்டுமே, 'காஸ்மெட்டிக்' பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது, சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்கள் வரை, பல நிறுவனங்கள் நவீன, 'பியூட்டி பார்லர்'களாக, இந்த மையங்களை துவங்கிவிட்டன.
நவ நாகரீக உலகில், அழகுக்கலையில் பெண்களுக்கு இருந்த ஆர்வத்தை மிஞ்சும் வகையில், ஆண்களும் விபரீதம் பற்றி கவலைப்படாமல் இந்த மையங்களை நாடி வருகின்றனர். இப்படி, வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை செய்த டாக்டர், அடுத்த நாளே, 'அலர்ஜி' ஏற்பட்டு இறந்த கொடூரம் சென்னையில் நடந்துள்ளது.

டாக்டர் பரிதாப பலி
வேலுார் மாவட்டம், ஆரணி, எஸ்.வி.நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 22. எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு, சென்னை மருத்துவக் கல்லுாரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். வழுக்கை தலை, தன் அழகை குறைப்பதாக கருதிய அவருக்கு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஏ.ஆர்.எச்.டி., என்ற 'அட்வான்ஸ் ரொபாடிக் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் - குளோபல்' என்ற, பியூட்டி பார்லர் போன்ற மையத்தில் முடி மாற்று சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்த சிறிது நேரத்தில், உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற அவர், சொந்த ஊரான ஆரணி சென்றார். அடுத்த நாள், உடல்நிலை மிக மோசமானதால், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து, அவரது பெற்றோர், உடனே போலீசில் புகார் செய்யவில்லை.இறந்தது பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த விவகாரம், மருத்துவக் கல்வி இயக்ககம் வழியாக, சுகாதாரத் துறைக்கு சென்றது. சுகாதாரத் துறை நடவடிக்கையால், அந்த அழகுக்கலை மையம் இழுத்து மூடப்பட்டுள்ளது.
மருத்துவ சேவை பணிகள் இயக்குனரகம் அளித்த புகாரில், ஜூன், 2ம் தேதி மாலை, ஏ.ஆர்.எச்.டி., மையத்திற்கு, மாநகராட்சி, 'சீல்' வைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பும் அந்த மையத்தில் ஒட்டப்பட்டுள்ளது.இது போன்ற முடி மாற்று சிகிச்சை அளிக்க, 'பிளாஸ்டிக் சர்ஜரி' மற்றும், 'காஸ்மெடிக்' பயிற்சி முடித்திருக்க வேண்டும். ஆனால், இங்கு சிகிச்சை அளித்தவர்கள் எம்.பி.பி.எஸ்., மட்டுமே முடித்துள்ளனர். இந்த மையம், மஹாராஷ்டிர மாநிலம், புனேவை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்தியாவில், 11 மையங்கள் உள்ளன. வங்கியில் கடன் வாங்கி தந்து, சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளதாக அந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.தமிழகத்தில், சென்னையில் மட்டும் தான் மையம் உள்ளது. கோவையில், விரைவில் துவங்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த மையம், எம்.பி.பி.எஸ்., முடித்த டாக்டர்களுக்கு, 10 நாள் பயிற்சி கொடுத்து, மையங்களில் வேலைக்கு வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இது போன்று, சென்னையில், 45 மையங்கள்; பிற நகரங்களில், 10 என, 55 மையங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இந்த மையங்களில், காஸ்மெடிக்,
பிளாஸ்டிக் சர்ஜரி முடித்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனரா; ஒப்புக்கு பயிற்சி
பெற்ற டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனரா என்றும் தெரியவில்லை.
இதுகுறித்து, தமிழக அரசு சிறப்புக்கவனம் செலுத்தி, தொடர் ஆய்வுகளை நடத்தினால் மட்டுமே இதுபோன்ற உயிர்பலி அபாயங்களை தடுக்க முடியும்.எது எப்படியோ இயற்கை அழகை நம்பாமல், நவ நாகரீக உலகில், வழுக்கையை மறைக்கிறோம்; மச்சத்தை அகற்றுகிறோம்; முக சுருக்கத்தை நீக்குகிறோம் என, பணத்தைப் பற்றி கவலைப்படாமல், ஒவ்வொரு மருத்துவமனையாக, அழகு மையமாக அலைபவர்கள் கொஞ்சம் யோசித்தால் பேராபத்தில் இருந்து தப்பலாம்.

பிரேத பரிசோதனை
'டாக்டர் சந்தோஷ்குமார் மரணத்திற்கு, சிகிச்சை அளித்த டாக்டர்கள் தான் காரணம்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவரது தாய் ஜோஸ்பின், சென்னை, நுங்கம்பாக்கம் போலீசில், கடந்த 4 ஆம் தேதி புகார்அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிந்து இன்று பிரேத பரிசோதனை SRC கல்லூரி அருகே உள்ள கல்லரை தோட்டத்தில் நLந்தது.இப்பணியில் நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பர பாரதி, மருத்துவர் சரவணக்குமார், வட்டாச்சியர் சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
0 comments:
Post a Comment