Thursday, July 28, 2016

On Thursday, July 28, 2016 by Tamilnewstv in
திருச்சி 28.7.16               சபரிநாதன் 9443086297
பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப்பொறியாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்
பொதுப்பணித்துறையில் ஒய்வு பெற்ற செயற்பொறி;யாளருக்கு மறுபணியமர்வு ஆணை அரசு வழங்கியது இது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கத்தின் அவசர தலைமைச்செயற்குழு கூட்டம் 27.7.16 நடைபெற்றது
பொதுப்பணித்துறையில் 5 1....2 மாதங்கள் மட்டுமே செயற்பொறியாளராக பணியாற்றி கடந்த 30.06.16 பணி ஓய்வு பெற்ற ஜெயலட்சுமி என்பவருக்கு அரசு மறுபணியமர்வு ஆணை இரண்டு ஆண்டுகள் நீடித்திட வழங்கி அவர் எந்த கோட்டத்தில் பணி ஓய்வு பெற்றாரோ அதே கோட்டத்தில் செயற்பொறியாளராக 26.7.16 மீண்டும் பணியேற்றுள்ளார். இந்நிகழ்வினால் செயற்பொறியாளர் பதவி உயர்வு முதுநிலை பட்டியலில் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு பெறும் சந்தர்ப்பம் இழக்க நேர்ந்துள்ளது பதவி உயர்வு என்பது அரசு பணியில் ஓர் ஏற்றம் அந்த ஏற்றத்தை தகுதியும் வாய்ப்பும் இருந்து பதவி உயர்வை இழக்க நேரிடுகிறது என்பதை வழியுறுத்தி இந்த கவனஈர்ப்பு போரட்டம் என்று திருச்சி பொறியாளர் சங்க செயலாளர் முருகேஷன் தெரிவித்தார்.

பேட்டி முருகேஷன்