Wednesday, July 13, 2016

On Wednesday, July 13, 2016 by Tamilnewstv in    
திருச்சி 13.7.16               சபரிநாதன் 9443086297
 புகையிலை எதிப்பு பேரணி
 திருச்சி தேசியக்கல்லூரி தேசிய மாணவர் (விமானப்பிரிவு)படையினர் சார்பில் புகையிலை எதிப்பு பேரணி நடைபெற்றது. பேரணியானது காலை 10மணிக்கு தேசியக்கல்லூரியிலிருந்து துவங்கியது.
பேரணி துவங்குவதற்கு முன் கார்ப்ரல் நாகர்ஜீன் உறுதி மொழியை வாசிக்க பிற மாணவர்கள்  திரும்பக்கூற புகையிலை எதிர்ப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ஸ்ரீநிவாசன் பேரணியை துவக்கி வைத்தார்.
இந்தப்பேரணி தேசியக்கல்லூரி தேசிய மாணவர் (விமானப்பிரிவு) படை அதிகாhயும் கல்லூரியின் தேர்வு நெறியாளருமான ஸ்க்வார்டன் லீடர் முனைவர்.  சுந்தர்ராமன் தலைமையில் பேரணி மேம்பாலம் திருச்சிராப்பள்ளி சந்திப்பு புகைவண்;டி நிலையம் ஆயுள் காப்பீட்டுக்கழகம் ஸ்டேட் பாங்க்ஆப்இந்தியா விக்னேஷ் ஹோட்டல் அரிஸ்டோ ஹோட்டல் வழியாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினையோகித்து பின்னர்  கல்லூரியை சென்றடைந்தது.

0 comments: