Monday, July 11, 2016

On Monday, July 11, 2016 by Tamilnewstv in    
திருச்சி 11.7.16               சபரிநாதன் 9443086297
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை 40 வார்டு மக்கள் மற்றும் திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் முற்றுகை யிட்டனர்;

அப்பொழுது மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் கூறுகையில்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 40வது வார்டு பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிற காவேரி குடிநீர் பிராட்டியூர் பேரூராட்சியாக இருந்தபோது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் பிராட்டியூர் சாத்தனூர் பேரூராட்சி களின் சார்பில் ரூ95லட்சம் பணம் 1987 ம் ஆண்டு கட்டப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி குடிநீருக்கு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் பணம் செலுத்தி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேற்படி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கிவருகிற தண்ணீருக்கு பொருத்தப்பட்ட மீட்டர் பழுதடைந்த நிலையில் அதனை சரிசெய்யாத குடிநீர் வடிகால் வாரியம் ஜீயபுரம் காவிரி படுகையில அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளின் மூலம் வருகிற காவிரிகுடிந{ர் வழியில் உள்ள கிராமமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான தண்ணீரை குழாய்களை உடைத்;து எடுத்துவரும் நிலையில் 1987களில் இருந்த குடியிருப்புகளின் எண்ணிக்கையிலேயே அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் வருகிற தண்ணீர் இன்று ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குள் பெருகியிருக்கிற குடியிருப்புகளுக்கு ஏற்றவாறு குடிநீர்திட்டத்தை அபிவிருத்தி செய்யவேண்டிய மாநகராட்சி நிர்வாகம் 10ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த மீட்டரி;ல் குடிநீர் வடிகால் வாரியாத்திற்கு வராத தண்ணீருக்கும் சேர்த்து பணம் செலுத்தி வருகிறது.
கிராமப்புறங்களில் தினந்தோறும் மின்விநையோகம் நிலையி;ல் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாநகராட்சிநிர்வாகம்  செலுத்திவரும் கட்டணத்;தை கணக்கீட்டு வழங்கினால். குடிநீர் வடிகால் வாரியம் உரிய தண்ணீரை நமக்கு வழங்க முயற்ச்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் நம்முடைய பகுதிக்கு வரவேண்டிய தண்ணீரை தராத குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பணம் செலுத்தி வருகிறது.
நம்முடைய சட்டமுன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என் நேரு அவர்களின் பெருமுயற்சியால் திருச்சி மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்ட கொள்ளிடம் குடிநீர் திட்டத்தின் 20 சதவீத பணிகளை கடந்த 5 ஆண்டுகளாக அலட்சியமாக நிறைவு செய்யாத மாநகராட்சி நிர்வாகம் கொள்ளிடம் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யாமல் மனித கழிவுகளை விட  மோசமான நிலையில் தண்ணீரை வழங்கி வருகிறது. ரூ80 குடிநீர் கட்டணம் வசுலித்தது வந்த மாநகராட்சி நிர்வாகம் தினந்தோறும் குடிநீர் வழங்காமல் மாதத்திற்கு 10 தினங்கள் கூட வராத தண்ணீருக்கு ரூ160 கட்டணம் வசுலித்து வருகிறது என்று கூறினார் பின்னர் மேயர் ஜெய மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு செய்வதாக கூறிய பின் மாமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் மாநகராட்சி பகுதயில் பரபரப்பு ஏற்ப்பட்டது ஏரளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


பேட்டி 40வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம்

0 comments: