Monday, July 04, 2016
On Monday, July 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
03.07.2016
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில்;
401 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பில்
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளின் மேம்பாட்டிற்கு இணை மானியம்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் மற்றும்
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.சீ.வளர்மதி
ஆகியோர் வழங்கினார்கள்.
-----------
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில்; 401 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளின் மேம்பாட்டிற்கு இணை மானியம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.சீ.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.
நாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.டி.ரத்தினவேல்திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமிஇ.ஆ.ப. அவர்கள் தலைமை வகித்தார்.
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளின் மேம்பாட்டிற்கு இணை மானியங்கள் வழங்கி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்; அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இஸ்லாமிய மக்கள் சம உரிமை பெற்றிட சம வாழ்வு பெற்றிட உயரிய நோக்கத்தில் நிதி ஆதாரத்தை பெருக்கிட எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முஸ்லீம் மகளிர் சங்கங்களுக்கு சங்கங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு ஏற்கனவே அதற்கு இணையான மானியத்தொகை 1:1 என்ற வீதத்தில் வழங்கப்பட்டது. தற்பொழுது 1:2 என்ற வீதத்தில் உயர்த்தி அதாவது திரட்டப்படும் நிதிக்கு இரண்டு மடங்கு மானியம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவிட்டார்கள்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 746 முஸ்;லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளுக்கு ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.37.90 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதற்கட்டமாக 193 முஸ்;லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளுக்கு ரூ.9.95 இலட்சம் வழங்கப்பட்டது. இன்று (03.07.2016) 401 முஸ்;லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளுக்கு தலா ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.20 இலட்சத்தி ஐந்தாயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1346 முஸ்;லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளுக்கு ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.67.90 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு சுயதொழில் தொடங்கிட நிர்ணயிக்கப்பட்ட கடன் உச்சவரம்பு ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சமாக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆணையிட்டார்கள்.
நேற்றைய தினம் சென்னையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை மாண்புமிகு அம்மா அவர்கள் வெகு விமர்ச்சையாக ஏற்பாடு செய்து ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளான இறை நம்பிக்கை தொழுகை நோன்பு தர்மம் ஹஜ் ஆகியவைகள் பற்றி எடுத்துக் கூறி நோன்பு நோர்பவற்களுக்கு தானே நேரடியாக கூலியை கொடுப்பேன் என்று இறைவன் உறுதியளித்திருப்பதை சுட்டிக்காட்டி இத்தகைய நோன்பு திறப்பு கொடையையும் அன்பையும் பரைசாற்றுவதாக எடுத்துரைத்து பேசினார்கள். இஸ்லாமிய மக்களின் அரணாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் விளங்கி வருகிறார்கள். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளின் மேம்பாட்டிற்கு இணை மானியங்கள் வழங்கி மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் அனைத்து மதத்தினரும் சமமாக இருக்க வேண்டும் என எண்ணி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பொதுவாக மதம் என்பது மனிதன் வகுத்துக்கொண்டது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் சமம் என்ற அளவிற்கு மக்கள் நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். குறிப்பாக இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மற்றும் கிறிஸ்தவர்கள் புனித ஜெருசலம் செல்ல நிதியுதவி மற்ற மதத்தினரும் புனித பயணம் செல்வதற்கும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திட வாழ்வாதாரம் உயர்ந்திட பொருளாதார வசதி மேம்படுத்திட பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை தொழில் தொடங்கிட பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி உலமாக்கல் நல வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விடுதி வசதிகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் அக்டோபர் 17 அன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட ஆணையிட்டார்கள். மேலும் ;ஆகஸ்டு 15 அன்று முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் பெயரால் அறிவியல் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கு இணங்க திருச்சிராபள்ளி மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 62 பள்ளிவாசல்களுக்கு மொத்தம் 1130 குவிண்டால் பச்சரிசி வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இஸ்லாமிய சமுதாய மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். நகர்புறம் மற்றும் கிராமப்புற ஏழை எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம் கடன் உதவி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு ரூ5.86 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. உலமாக்கல் நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் இதுவரை திருமண உதவி 22 பயனாளிகளுக்கும் கல்வி உதவித்தொகை 17 பயனாளிகளுக்கும் கண்கண்ணாடி உதவித்தொகை 58 பயனாளிகளுக்கும் முதியோர் ஒய்வுதியம் 8 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவராண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் இறந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.16,22,056 மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
மேலும் இவ்விழாவில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் காசநோயாளிகளை கண்டுபிடிப்பதற்கும் சிகிச்சை வழங்குவதற்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை காலம் வரை சுகாதார வழிமுறைகளை வழங்குவதற்கும் காசநோய் களப்பணியாளர்களுக்கு ரூ.5.70 இலட்சம் மதிப்பில் 12 இருசக்கர மோட்டார் வாகனங்களையும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
விழாவில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.அ.ஜெயா சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.செல்வராஜ் திருமதி.எம்.பரமேஸ்வரி மாநகராட்சி துணை மேயர் திரு.ஜெ.சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ் மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.டி.ராஜாத்திமத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ராமு ஸ்ரீரங்கம் மண்டல குழுத்தலைவர் திருமதி.லதா மாமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜா திரு.ஏர்போர்ட் விஜி திரு.நாட்டாமை சண்முகம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.பத்மநாபன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ராஜேந்திரன் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்தி துணை இயக்குநர் டாக்டர் எஸ்.சாவித்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் கௌசல்யா முஸ்லீம் மகளிர் உதவும் சங்க செயலாளர் ஹாஜீ எஸ்.கலிலூர் ரஹ்மான் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க இணைச் செயலாளர் ஹாஜீ டாக்டர் எம்.கே.எம்.உஸ்மான் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க இணைச் செயலாளர் ஹாஜீ ஏ.எம்.முஸ்தபா கமால் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர் ஹாஜீ ஏ.பி.எல்.பர்வீன் கனி; மற்றும் ஏராளமான முஸ்லீம் மகளிர் சங்க பயனாளிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்...
-
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு கோவில்களில் முறையான பூஜை செய்திட ஏதுவாக பித்தளை தாம்பளம்,அமைசர் தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும்...
-
நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
உடுமலை அருகில் அமராவதி பிரதான கால்வாயில் குளித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார். உடுமலை, காந்தி சவுக் பகுதியைச்...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் அரசு மானியத்துடன் 107 நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்க...
0 comments:
Post a Comment